குலத்தொழில் தொடரலாமா? வேண்டாமா?
தொழில்மயமாக்கல்
மற்றும் நவீன கல்வி முறைகள்
உலகளவில் மட்டுமல்லாமல் நம் நாட்டிலும்
பரம்பரைத் தொழில்களைத் தொடரும் முறையினைக் குறைத்துள்ளன.
இருப்பினும்,
இணையத்தளத்தில் ஆய்ந்ததில் எனக்கு தோன்றிய கருத்தினை இங்கு பகிர்கிறேன் (இது ஆதரவு அல்லது
எதிர்ப்பு பிரச்சாரம் அல்ல. விவாதத்திற்கு அப்பாற்பட்ட எனது தனிப்பட்ட கருத்து.
இன்றைய பிரபல நாளிதழில் வெளிவந்த கட்டுரைக்கான எனது எண்ணோட்டம். இது
அரசியல் கருத்து அல்ல)
இதில் சாதகமான விஷயங்கள்:
(1) தனிப்பட்ட தொழில்
நுணுக்கம் கொண்ட வேலை.
(2) தொன்றுதொட்டு செய்து
வந்த பணிகள் மற்றும் அதன் பால் கொண்ட
காதல்.
(3) மேலே சொன்ன
காரணம் மற்றும் மரபணு சார்ந்த காரியம்.
(4) சில நாடுகள்
இன்றளவும் பாரம்பரிய தொழில் மரபுரிமையை அடிக்கடி ஊக்கப்படுத்துகின்றன.
மனதை நெருடும் பாதக விஷயங்கள்:
முன்பொரு
காலத்தில், இந்தியா
போன்ற பரம்பரை மற்றும் கலாச்சாரம் மிக்க தனித்துவம் வாய்ந்த நாடுகள் பரம்பரை
தொழில்களுடன் பின்னி பிணைக்கப்பட்ட சமுதாயத்தினைக் கொண்டிருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அரசியலமைப்பு, வெளிப்படையாக
ஜாதி அடிப்படையிலான பாகுபாடு பார்ப்பது என்பது சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவிக்கின்றது. அத்துடன் இந்திய அரசியலமைப்பு சட்டம் "தீண்டாமையை" ஒழித்தது.
மிகவும்
முன்னேறிய இந்த நாகரிக உலகத்தில்
நமது ஒன்றுபட்ட இந்தியா கல்வி மற்றும் அரசு வேலைகளில் இட
ஒதுக்கீடு போன்ற உறுதியான செயல் கொள்கைகள் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதை நோக்கமாகக்
கொண்டு வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
தற்போதைய
நிலையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு
சட்டவிரோதமானது என்றாலும், சட்டப்பூர்வ தடைகள் இருந்தபோதிலும், அவரவர்கள்
தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தொழில்களையே செய்து
வருகின்றனர்.
எப்படி இருந்தால் நன்றாக இருக்கும்??
(1) சமவாய்ப்பு: இந்த
சிறந்த திட்டத்தின் மூலம் அனைத்து மக்களும் சம உரிமை, சம
வாய்ப்பு பெற வேண்டும்.
(2.) மதிப்பு:
ஒவ்வொரு மனிதரின் மதிப்பையும், அவர்களின் கலாச்சாரத்தை மற்றும் மரபுகளை ஏற்கும் மனநிலை வேண்டும். அதற்கேற்றாற் போல, காட்டுமிராண்டித்தனத்தை விட்டு வெகு
தொலைவு வந்து
இந்த நவ நாகரிக உலகத்தில் வாழும் நிலையில் அவரவர்
விருப்பத்திற்கு ஏற்ற வேலையினை செய்யும்பொழுது
மன நிறைவு மற்றும் அமைதியான வளமான வாழ்வு அமையும்.


Comments
Post a Comment